தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'சிலையாலே வந்தது... பேனராலே முடிந்தது! போராட்டம் பொய்க்கும் என யார் சொன்னது?'

'சிலையாலே வந்தது... பேனராலே முடிந்தது! போராட்டம் பொய்க்கும் என யார் சொன்னது?'

'சிலையாலே வந்தது... பேனராலே முடிந்தது! போராட்டம் பொய்க்கும் என யார் சொன்னது?'


ADDED : மார் 21, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவானி; பவானியை அடுத்த மயிலம்பாடியில், பிரசித்தி பெற்ற கரியகாளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவிலில், ஒரு தரப்பினர் தன்னிச்சையாக சிலை, சிலையை பாதுகாக்க இரும்பு பெட்ட-கமும் வைத்தது சர்ச்சையை கிளப்பியது. மற்-றொரு தர்பபினர், இவற்றை அகற்ற வலியுறுத்தி வந்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை அதி-காரிகள் கண்டு கொள்ளாத நிலையில், பலகட்ட போராட்டம் நடத்தியும் பலனில்லை.

இந்நிலையில் சிலையை அகற்றாததை கண்-டித்து, கோவில் வகையறாவுக்கு சொந்தமான, 20 கிராமங்களை சேர்ந்த மக்கள், சட்டசபை தேர்-தலை புறக்கணிப்பு செய்வதாக, ஊர் எல்லையில் நேற்று முன்தினம் பேனர் வைத்தனர்.இதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகா-ரிகள், பவானி போலீசாருடன் கோவிலுக்கு நேற்று சென்றனர். கோவில் உள்ளேயிருந்த அம்மன் சிலையை எடுத்து, கோவில் பொங்கல் மடத்திலும், இரும்பு பெட்டகத்தை கோவில் மண்டபத்திலும் வைத்தனர்.

ஆறு மாதமாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்-ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து, தேர்தல் புறக்கணிப்பு பேனரையும் அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us