/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜடேருத்ரசாமி கோவில் தேர்த்திருவிழா
/
ஜடேருத்ரசாமி கோவில் தேர்த்திருவிழா
ADDED : நவ 17, 2024 02:27 AM
ஜடேருத்ரசாமி கோவில்
தேர்த்திருவிழா
சத்தியமங்கலம், நவ. 17-
ஆசனுார் அருகே, பிரசித்தி பெற்ற ஜடேருத்ரசாமி கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.
ஆசனுாரை அடுத்த கேர்மாளம் அருகே உள்ள, சிக்குன்சே பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஜடேருத்ரசாமி கோவில் உள்ளது. நடப்பாண்டு தேர்த்திருவிழா கடந்த, 14ம் தேதி எண்ணெய் மஜ்ஜனம் சேவையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பால் குடம் சேவை நடந்தது.தொடர்ந்து தீப அலங்காரம், பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் நடந்தது. நேற்று மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவில் கேர்மாளம், தாளவாடி, ஆசனுார், கெத்தேசால், கோட்டாடை, கடம்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், ஹனுார், சாம்ராஜ்நகர், உடையர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 5,000க்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

