/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜல்ஜீவன் திட்டப்பணியால் சென்னிமலையில் தவிப்பு
/
ஜல்ஜீவன் திட்டப்பணியால் சென்னிமலையில் தவிப்பு
ADDED : டிச 01, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜல்ஜீவன் திட்டப்பணியால்
சென்னிமலையில் தவிப்பு
சென்னிமலை, டிச. 1-
சென்னிமலை பேரூராட்சி பகுதியில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆறு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. அரச்சலூர் சாலை, எம்.எஸ்.கே., நகர், அம்மாபாளையம் பகுதிகளில், 90 சதவீத பணி முடிந்துள்ளது. தற்போது நகரில் பல இடங்களில் பணி நடப்பதால் எங்கு பார்த்தாலும் குழியாக உள்ளது. இதனால் பல இடங்களில் தற்போதுள்ள குடிநீர் குழாய் உடைபடுவதால், குடிநீர் வினியோகம் பாதிக்கிறது. மெதுவாக வேலை நடப்பதால் வாகன ஓட்-டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.