ADDED : நவ 14, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: இன்று மற்றும் நாளை சுப முகூர்த்த தினங்கள் என்பதால், சத்தி பூ மார்க்கெட்டில், பூக்களின் விலை நேற்று உயர்ந்தது.
ஒரு கிலோ மல்லிகை பூ, 2,300 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-785, காக்-கடா-900, செண்டுமல்லி-58, கோழிகொண்டை-105, ஜாதி-முல்லை-750, சம்பங்கி-100, அரளி-180, துளசி-50, செவ்வந்தி-240 ரூபாய்க்கும் விற்பனையானது.

