/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாடகையை உயர்த்தக்கோரி ஜே.சி.பி.,க்கள் 'ஸ்டிரைக்'
/
வாடகையை உயர்த்தக்கோரி ஜே.சி.பி.,க்கள் 'ஸ்டிரைக்'
ADDED : ஏப் 22, 2025 01:16 AM
ஈரோடு:ஜே.சி.பி., வாகன உதிரி பாகங்கள், சாலை வரி, வாகன காப்பீடு, வாகன விலை, ஓட்டுனர் ஊதியம், எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஜே.சி.பி., வாகனத்துக்கான வாடகையை உயர்த்தி வழங்க உரிமையாளர் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு செவி சாய்க்காததால், நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி ஜே.சி.பி., உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஜே.சி.பி., வாடகையை ஒரு மணி நேரத்துக்கு, 1,400 ரூபாயாக உயர்த்த வேண்டும். குறைந்தது, 2 மணி நேரத்துக்கு, 3,500 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த வேலை நிறுத்தம் இன்று (நேற்று) தொடங்கி, நாளை மறுதினம் (24ம்தேதி) வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். போராட்டத்தில், 70 ஜே.சி.பி., வாகன உரிமையாளர் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு கூறினர்.