ADDED : ஏப் 27, 2026 04:06 AM
ஈரோடு:திறன்
மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், ஈரோடு ஜெம் அண்ட்
ஜுவல்லரி சார்பில், ஈரோட்டில் மேட்டூர் சாலையில் திருச்சி கபே அருகில்,
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே, 4-ந் தேதி
முதல் 14ம் தேதி வரை, 11 நாட்கள் பயிற்சி நடக்கிறது. பயிற்சியில்
தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை. உரை கல்லில்
தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம்
அறியும் விதங்கள் குறித்து பயிற்சி இருக்கும்.
இதில், 18 வயது
நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை.
கல்வி தகுதி குறைந்தது எட்டா-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி இறுதியில்
இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய
கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி
நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளாராகவும் பணியில் சேரலாம். நகை
வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளாராகவும்,
விற்பனையாளராகவும் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவர்கள்
மூன்று ஸ்டாம்ப் சைஸ் போட்டோ. முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழுடன்,
பயிற்சி கட்டணம், 8,500 ரூபாயுடன் அணுகவும். கூடுதல் விபரங்கள் பெற
கைபேசி எண், 94437-28438ல் தொடர்பு கொள்ளலாம்.
