ADDED : மே 13, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், வரும், 16ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
பல்வேறு தனியார் துறையினர், தங்களுக்கு தேவையான எழுத படிக்க தெரிந்த, பட்டப்படிப்பு படித்த நபர்கள், செவிலியர், டெய்லர், கணினி இயக்குபவர், தட்டச்சர், ஓட்டுனர் போன்ற தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பங்கேற்று பயன் பெறலாம். கூடுதல் விபரத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 86754-12356, 94990-55942 என்ற எண்ணில் அறியலாம்.