ADDED : நவ 12, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் சபர்மதி ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக
சென்னிமலை வந்த அவரை, கோவில் செயல் அலுவலர் சபரீஸ்குமார்,
கண்காணிப்பாளர் மாணிக்கம் ஆகியோர் வரவேற்றனர். மலை கோவிலுக்கு
சென்ற இணை ஆணையர் சபர்மதி, சுவாமி தரிசனம் செய்தார். மேலும் பிரசாத
கடைகள், மலை கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நுாலகம், அன்னதான மண்டபம்
உட்பட கோவிலின் அனைத்து பகுதி
களிலும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
