'ஜூனியர்' வேட்பாளர்; அந்தியூர் அ.தி.மு.க.,வினர் அதிருப்தி
'ஜூனியர்' வேட்பாளர்; அந்தியூர் அ.தி.மு.க.,வினர் அதிருப்தி
ADDED : மார் 28, 2026 05:05 AM
அந்தியூர்; அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு, ஜூனியர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அந்தியூர் அ.தி.மு.க.,வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., கோட்டையாக கருதப்படும் அந்தியூர் தொகுதி, கடந்த தேர்தலில் உட்கட்சி பூசலால், தி.மு.க., வசமானது. தற்போதைய தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க.,வினர் கங்கணம் கட்டினர். குறிப்பாக செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபி-றகு, பொது செயலர் இ.பி.எஸ்.,சும் கூடுதல் கவனம் செலுத்தினார். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களும், சீனியர்களுமான ரமணீதரன், ராஜாகிருஷ்ணன் மற்றும் சுப்ரீம் கோர்ட் வக்கீல் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் 'சீட்' கேட்டு பணம் கட்டினர்.இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பா-ராத வகையில் டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹரி பாஸ்கர் அறிவிக்கப்பட்டார். இதனால் அந்தியூர் அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: அந்தியூரை பொறுத்தவரை, ரமணீதரன், ராஜாகி-ருஷ்ணன் தனித்தனி கோஷ்டிகளாக செயல்படு-கின்றனர். தேர்தலில் இவர்களில் யாராவது ஒரு-வருக்கு 'சீட்' கிடைத்திருந்தாலும், வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருக்கும். ஆனால் இவர்-களை விட 'ஜூனியரான' ஹரிபாஸ்கருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மூத்த நிர்வாகி-களை அதிருப்தியில் தள்ளியுள்ளது.
எந்த தேர்தலில் 'சீட்' ஒதுக்கினாலும், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட், தவிட்டுப்பாளையம் பகுதியில் பட்டாசு வெடித்து கட்சியினர் உற்சாகம் அடைவர். நேற்று அந்தியூரில் கட்சியினர் களையிழந்து காணப்பட்டனர். சீனியர்களை ஜூனியர் ஹரி-பாஸ்கர் எப்படி சரி கட்டுவார் என தெரிய-வில்லை. இவ்வாறு கூறினர்.
