/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமராஜர் 123வது பிறந்தநாள் கொண்டாட்டம்
/
காமராஜர் 123வது பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 01:17 AM
ஈரோடு, காமராஜர், ௧௨௩வது பிறந்ததின விழா, ஈரோடு மாநகர், மாவட்டத்தில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர்.
ஈரோடு எஸ்.கே.சி, சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், காமராஜர் உருவப்படத்துக்கு தலைமை ஆசிரியை சுமதி தலைமையில்
ஆசிரியைகள், மாணவ -
மாணவிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் மாணவியர் மரியாதை செலுத்தினர். மொடக்குறிச்சி தாலுகா செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை ஒன்றியம் செங்காளிபாளையம் அரசு ஆரம்ப் பள்ளி என அரசுப்பள்ளிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
* ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* கோபி அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், எம்.எல்.ஏ., செங்கோட்டையன் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கச்சேரி மேட்டில் காங்., சார்பில், நகர தலைவர் மாரிமுத்து தலைமையில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.
* சென்னிமலை வட்டார, நகர காங்., சார்பாக நகர தலைவர் செந்தில், வட்டார தலைவர்கள் தலைமையில், குமரன் சதுக்கத்தில் காமராஜர் படத்துக்கு மலர் துாவி மரியதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நகர பொறுப்பாளர் அருண் தலைமையில், காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.
*பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் அரசு நடுநிலை பள்ளி, சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.