ADDED : ஜூலை 16, 2026 04:13 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:முன்னாள்
முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஈரோடு மாநகர்
மாவட்ட த.வெ.க., சார்பில் ஜி.எச்.ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு
மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாநகர் மாவட்ட இணை செயலர் அக்கீம்
தலைமை வகித்தார். காமராஜருக்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை
செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஈரோடு மேற்கு எம்.எல்.ஏ.,
ஆனந்தமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
