/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்
/
சென்னிமலை முருகன் கோவிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்
சென்னிமலை முருகன் கோவிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்
சென்னிமலை முருகன் கோவிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்
ADDED : டிச 14, 2024 01:43 AM
சென்னிமலை, டிச. ௧௪-
கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று தீபம் ஏற்பட்டது. முன்னதாக முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிறகு ராஜாகோபுரம் முன்பு உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கட்டளைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல் முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தினர். சென்னிமலை பகுதிகளில் வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
* பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து, ஈஸ்வரர், அம்மன், பெருமாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பவானி ஊராட்சிக்கோட்டை வேதகிரீஸ்வரர் கோவில், பவானி, அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டார பகுதி கோவில்களில் தீபம் ஏற்றப்பட்டது. பொது மக்களும் வீடுகளில் தீபம் ஏற்றி கார்த்திகை திருநாளை கொண்டாடினர்.