ADDED : நவ 18, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை அருகே ஊத்துக்குளி சாலையில் நஞ்சுண்டஈஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மற்றும் கார்த்திகை மாதத்தில், திங்கள்கிழமைகளில் (சோம வாரம்) மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திகை மாதம் திங்கள்கிழமையான நேற்று பிறந்தது.
இதனால் சுற்றுவட்டார கிராமம், காங்கேயம், திருப்பூர், ஊத்துக்குளி, பெருந்துறை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

