காங்கேயத்தில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு
காங்கேயத்தில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு
ADDED : பிப் 13, 2026 04:32 AM
காங்கேயம்: காங்கேயத்தில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை வரும், 25ம் தேதிக்குள் அகற்ற, காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு, காங்கேயம் நெடுஞ்சாலைதுறை உதவிக்கோட்ட பொறியாளர் வடிவேல்குமரன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:காங்கேயம்-திருப்பூர்-சாலையில், திருப்பூர் ரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வரை; ஈரோடு--தாராபுரம் சாலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முதல் பழையகோட்டை ரோடு பஸ் டிப்போ வரை; பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முதல் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா வரை; ஈரோடு-பெருந்துறை-காங்கேயம் சாலை, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து சென்னிமலை ரோடு மின் மயானம் வரையிலான சாலைகளில், நெடுஞ்சாலையோர இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து, 25ம் தேதிக்குள் கற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் மறுநாள் நெடுஞ்சாலைத்துறை அகற்றப்படும். ஆக்கிரமிப்பை அகற்றும்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு எந்த விதத்திலும், நெடுஞ்சாலைத்துறை பொறுப்பேற்காது. இவ்வாறு நோட்டீசில் தெரிவித்துள்ளார்.
