ADDED : அக் 03, 2026 05:41 AM

ஈரோடு:காந்தி
ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு திருமகன் ஈ.வெ.ரா., சாலையில் யூனியன்
அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, கலெக்டர் கந்தசாமி கதர் மாலை
அணிவித்து, மலர் துாவி மரியாதை
செலுத்தினார்.
அதே வளாகத்தில்
உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில், காந்தி ஜெயந்தியை
முன்னிட்டும், தீபாவளிக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர்
துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இரண்டு கதர்
உற்பத்தி நிலையங்கள் மூலம், 60 பெண் நுாற்பாளர்
களுக்கு வேலை
அளிக்கப்படுகிறது. 25 நெசவாளர்களுக்கு நேரடியாகவும், 125
பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கு,
4.06 கோடி ரூபாய் மதிப்பில் கதர், கிராம பொருட்களை விற்பனை செய்ய
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கதர், பட்டு, பாலியஸ்டர்
ரகங்களுக்கு, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவ்வாறு பேசினார்.
