ADDED : மே 04, 2026 03:37 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் தாகம் தீர்க்க
குளிர்பானம், தர்பூசணி, இளநீர், முலாம்பழம் உள்ளிட்ட பழங்களை நாட
தொடங்கியுள்ளனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில்
திடீர் குளிர்பான கடைகள், பழங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும்
விற்பனை செய்யும் கடைகள் வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இளநீர், தர்பூசணி, முலாம்பழம், ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழ ஜூஸ்களை
மக்கள் அதிகம் பருகி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிக வருவாய்
பெறும் நோக்கில் ரசாயனங்கள் தெளித்து பழங்களை பழுக்க வைத்தால் கடை
வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
