ADDED : மே 12, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
ஈரோடுஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பிரபு, 38, சுமை துாக்கும் தொழிலாளி. இவர் சித்தப்பா மகன் கவின், 21; இவரும் சுமை துாக்கும் தொழிலாளி. இருவரும் இதுதவிர பல்வேறு கூலி வேலைக்கும் செல்வர்.
அன்னை சத்யா நகரில் கோவில் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது கூலி தொகையை பிரிப்பது குறித்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, கவின் முதுகு பகுதியில் காய்கறி வெட்டும் கத்தியால் கிறீயுள்ளார். கவின் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார், பிரபுவை நேற்று கைது செய்தனர்.
