ADDED : ஜூலை 12, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,கோபி டி.இ.ஓ., (தொடக்க கல்வி) திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட டி.இ.ஓ.,வாக (இடைநிலைக்கல்வி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக இருந்த திருநாவுக்கரசு, கோபி டி.இ.ஓ.,வாக, 2023 ஆக.,4ல் பொறுப்பேற்றார். இந்நிலையில் கரூர் மாவட்ட டி.இ.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தர்மபுரி மாவட்டம் அதிகாரப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், பதவி உயர்வில் கோபி டி.இ.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ளார்.