ADDED : மே 12, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடுகொடுமுடி புது பஸ் ஸ்டாண்ட் ரயில்வே கேட் பகுதியில், பராமரிப்பு பணி நடப்பதால் மாற்று பாதையை பயன்படுத்த, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கொடுமுடி ரயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி
நடக்கிறது. எனவே வரும், 16ம் தேதி வரை கேட் மூடப்பட்டிருக்கும். வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாற்று சாலையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கடைவீதி, மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்வோர் நடைமேடை மேம்பாலத்தை பயன்படுத்தலாம். இவ்வாறு கூறினர்.
