/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விழிப்புணர்வு நிகழ்வில் முதலிடம் கொங்கு கலை கல்லுாரிக்கு பரிசு
/
விழிப்புணர்வு நிகழ்வில் முதலிடம் கொங்கு கலை கல்லுாரிக்கு பரிசு
விழிப்புணர்வு நிகழ்வில் முதலிடம் கொங்கு கலை கல்லுாரிக்கு பரிசு
விழிப்புணர்வு நிகழ்வில் முதலிடம் கொங்கு கலை கல்லுாரிக்கு பரிசு
ADDED : ஆக 13, 2025 05:23 AM
ஈரோடு: போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய-தற்காக, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரிக்கு, தமிழக அரசு மாநில அளவிலான முதல் பரிசை வழங்கியுள்ளது. அரசு வழிகாட்டுதலின்படி உயர்கல்வி நிறுவனங்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.
இந்த வகையில், 2024-25ம் கல்வியாண்டில், ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில், அதிகப்படியான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியது. இதற்காக கல்லுாரியின் போதைப்பொருள் தடுப்பு மன்றம், அரசின் மாநில அளவிலான முதல் பரிசை பெற்றுள்ளது.சென்னையில் நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பரிசு பத்திரம் மற்றும் கோப்-பையை வழங்க, கல்லுாரி முதல்வர் வாசுதேவன், போதைப்-பொருள் தடுப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜாகுமார் மற்றும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். கல்லுாரி தாளாளர் தங்கவேல், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லுாரி அறக்கட்-டளை நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.