/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய ஹேக்கத்தான் போட்டியில் கொங்கு இன்ஜி., கல்லுாரி அசத்தல்
/
தேசிய ஹேக்கத்தான் போட்டியில் கொங்கு இன்ஜி., கல்லுாரி அசத்தல்
தேசிய ஹேக்கத்தான் போட்டியில் கொங்கு இன்ஜி., கல்லுாரி அசத்தல்
தேசிய ஹேக்கத்தான் போட்டியில் கொங்கு இன்ஜி., கல்லுாரி அசத்தல்
ADDED : அக் 28, 2025 01:30 AM
பெருந்துறை, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய, தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி
யில் (கேமோவேட் - 2025), பெருந் துறை கொங்கு பொறியியல் கல்லுாரி மாணவர் முதலிடம் பிடித்தனர்.
வேதி பொறியியல் துறை உதவி பேராசிரியர் நேசக்குமார் வழிகாட்டுதலில், சுகந்தி, மணிகண்டபிரபு, சுதர்சன், மஞ்சுஸ்ரீ மற்றும் ஷர்னிதா ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றி பெற்றனர். வாழைப்பழ இலை கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிகட்டி காகிதம் என்ற புதுமையான திட்டம், நிலையான அணுகுமுறை மற்றும் நடைமுறை பயன்பாட்டால், 25,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய முதல் பரிசை வென்றது. இவர்களை கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன், முதல்வர் பரமேஸ்வரன், வேதி பொறியியல் துறைத்தலைவர் சங்கீதா ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.