ADDED : பிப் 02, 2026 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை; பெருந்துறை தாலுகா விஜயமங்கலம், பெரியவீர-சங்கிலி-யில், நந்தவன தோட்டம் பாமா-ருக்மணி சமேத ஸ்ரீ ஜெய யோக கிருஷ்ணர் கோவில் கும்-பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, 30ம் தேதி இரவு வருகை தந்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜ-யேந்திர சரஸ்வதி சுவாமிகள், விழா கல்-வெட்டை திறந்து வைத்தார். நேற்று காலை, 6:00 மணியளவில் கலச புறப்பாடை தொடர்ந்து, பரி-வார தேவதை கும்பாபிஷேகம் மற்றும் தீபாரா-தனை, விமானங்கள் மற்றும் பரிவார தெய்வங்க-ளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் மடம் சமஸ்தான பீடாதிபதிகள் பங்கேற்றனர்.

