/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிருஷ்ணாபுரம் முனியப்ப சுவாமி கோவில் திருவிழா
/
கிருஷ்ணாபுரம் முனியப்ப சுவாமி கோவில் திருவிழா
ADDED : அக் 30, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அடுத்த கிருஷ்ணாபுரம் வடக்கு தோட்டத்தில் முனியப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் கோவிலில் விழா துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை, பவானி காவிரியாற்றில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று காலை முனியப்ப சுவாமிக்கு அலங்கார பூஜை, பச்சை பூஜை மற்றும் பொங்கல், முக்காவு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுப்பாளையம், கிருஷ்ணாபுரம், வள்ளலார்புரம் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

