/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று ஆடிப்பெருக்கு விழா தயார் நிலையில் கூடுதுறை
/
இன்று ஆடிப்பெருக்கு விழா தயார் நிலையில் கூடுதுறை
ADDED : ஆக 03, 2025 01:21 AM
பவானி :ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி ௧௮ விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கானோர் இன்று புனித நீராடி வழிபடுவர். பலர் திருமணத் தடை, தோஷ நிவர்த்தி பரிகாரம் மற்றும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வர்.
திருமணமான பெண்கள் புதிதாக மஞ்சள் தாலிக் கயிறு மாற்றியும், திருமணத்தின்போது அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டும் வழிபாடு நடத்துவர். இதில்லாமல் படித்துறைகளில் பழம், காய், தானியங்களை வைத்து, காவிரித் தாய்க்கு வழிபாடும் நடத்தப்படும். அணிவகுக்கும் இத்தனை நிகழ்வுக்காக, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இன்று கூடுவர். இவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், போலீசார் செய்துள்ளனர்.
பவானி டி.எஸ்.பி., ரத்தினகுமார் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
கூடுதுறை ஆர்ச்சில் இருந்து கோவில் வளாகம், பரிகார மண்டபம், கோவில் வளாக வாகன நிறுத்தும் இடங்களில், 80 'சிசிடிவி' கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.