ADDED : ஆக 02, 2025 01:31 AM
சென்னிமலை, நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக, விடுதலை போராட்ட வீரர் குணாளன் நாடார், 220வது வீர வழிபாடு விழா, சென்னிமலை யூனியன் வெள்ளோட்டில், ஈரோடு ரோட்டில் உள்ள சதா மஹால் திருமண மண்டபத்தில் நாளை நடக்கிறது. பொன்.விஸ்வநாதன் நாடார் தலைமை வகிக்கிறார். நிகழ்வில் அமைச்சர்கள் முத்துசாமி, மனோ தங்கராஜ், சாமிநாதன் கலந்து கொள்கின்றனர்.
பா.ஜ., சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகர் சரத்குமார், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், ராமலிங்கம் கலந்து கொள்கின்றனர். பா.ம.க., சார்பில் பொருளாளர் திலகபாமா, சத்திரிய சான்றோர் படை ஹரி நாடார் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

