/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிரம்பும் நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை
/
நிரம்பும் நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை
ADDED : ஆக 21, 2024 02:47 AM
டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளத்தில், குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. அணையில், ௪௨ அடிக்கு தண்ணீர் தேக்கலாம்.கம்பனூர், விளாங்கோம்பை, கடம்பூர், குன்றி, மல்லியம்மன் துர்க்கம் உள்ளிட்ட மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரானது குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்து சேரும்.
நேற்று முன்தினம் அணை நீர்மட்டம், 39.09 அடியாக இருந்தது, நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்கமா, அணைப்பகுதியில், 37.8 மி.மீ., மழை பெய்தது. இதனால் நீர்ரவத்து அதிகரித்து, 39.32 அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்தால் எந்த நேரத்திலும் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.

