தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளர் பிரச்னைபேச்சுவார்த்தையில்உடன்பாடு

தொழிலாளர் பிரச்னைபேச்சுவார்த்தையில்உடன்பாடு

தொழிலாளர் பிரச்னைபேச்சுவார்த்தையில்உடன்பாடு


ADDED : மே 07, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பணிபுரியும் கலாஸ் தொழிலாளர்கள், டன் ஒன்றுக்கு இறக்கு கூலியாக, 120 ரூபாய் பெற்று வந்தனர்.

இந்நிலையில், புதிதாக வந்த ஒப்பந்ததாரர், 90 ரூபாய் மட்டுமே வழங்க முன் வந்ததாக கூறி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் கிடங்கு முன், தர்ணா செய்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை, 11:00 மணியளவில் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் திரவியம் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் டன் ஒன்றுக்கு, 100 ரூபாய் இறக்கு கூலியாக வழங்குவதாக கூறியதை, தொழிலாளர் சங்கத்தினர் ஏற்றுக் கொண்டதால், பிரச்னை முடிவுக்கு வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us