/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலி
/
கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலி
ADDED : ஜூன் 29, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம் பங்களாபுதுாரை அடுத்த நஞ்சை புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன குஞ்சான், 62; விவசாய கூலி தொழிலாளி. பங்களாபுதுார் அருகே ஒரு தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு செல்ல, சத்தி--அத்தாணி சாலையில் நேற்று மதியம் நடந்து சென்றார்.
அப்போது ஆப்பக்கூடலை சேர்ந்த கல்லுாரி மாணவர் திலீப்குமார், 20, ஓட்டி வந்த கார் முதியவர் சின்னக்குஞ்சான் மீது மோதி, அங்கிருந்த மற்றொரு காரின் மீது மோதி நின்றது. இதில் சின்னகுஞ்சான் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.