/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் காயமடைந்த கூலி தொழிலாளி சாவு
/
விபத்தில் காயமடைந்த கூலி தொழிலாளி சாவு
ADDED : ஆக 15, 2025 02:12 AM
பவானி, அம்மாபேட்டை அருகே ரெட்டிபாளையம், நேரு நகரை சேர்ந்தவர் நவீன் குமார், 23; கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அம்மாபேட்டையில் ஒரு கட்டடத்துக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் கடந்த, 11ம் தேதி ஈடுபட்டார்.
வேலை முடிந்து மாலையில், நண்பரின் பல்சர் பைக்கில், குருவரெட்டியூர்-ரெட்டிபாளையம் சாலையில் சென்றார். அப்போது சாலையோர கல்லில் மோதி தடுமாறி விழுந்ததில் காயடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
துாறல் மழையால் இதமான சூழல்
ஈரோடு, ஆக.15
ஈரோடு மாநகரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட சற்று குறைவாகவே இருந்தது. இந்நிலையில் மதியம், 3:௨௫ மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்து துாறலாக ஆரம்பித்து, வேகமெடுக்க துவங்கியது. ஆனால், 15 நிமிடத்தில் நின்று விட்டது. அதை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் கோபி பகுதியில் மதியம், 2:00 மணிக்கு தொடங்கிய சாரல் மழை, ௨:15 மணி வரை நீடித்தது. டி.என்.பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மதியம், 2:00 மணி முதல் மாலை வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.