ADDED : மார் 06, 2026 07:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கொடுமுடி,
இச்சிபாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ், 45, கூலி தொழிலாளி. ஹோண்டா
சைன் பைக்கில் வெற்றி கோனார் பாளையம் பகுதியில், நேற்று முன் தினம் இரவு
சென்றார். முன்னால் சென்ற லாரியை முந்தியபோது, எதிரே வந்த காரின்
பக்கவாட்டு கண்ணாடி உரசியதில் நிலை தடுமாறி தேவராஜ் சாலையில்
விழுந்தார்.
லாரியின் முன்பக்க டயர் தேவராஜ் மீது ஏறி, 20 மீட்டர்
துாரத்துக்கு இழுத்து சென்றது. இதில் இடுப்-புக்கு கீழ் பகுதி
உருக்குலைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக
கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொடுமுடி
போலீசார் விசாரிக்கின்-றனர்.
