நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்; சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், நம்பியூர் வட்டாரம் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, நம்பியூரில் நேற்று நடந்தது. இதில் கர்ப்பணிகளுக்கு சீர்வரிசை வழங்கி, அறு-சுவை உணவு வழங்கப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சீர்வரிசை பொருட்களை வழங்கினார். நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் தி.மு.க., செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* பவானிசாகர் வட்டார பகுதி கர்ப்பிணி பெண்க-ளுக்கு சமுதாய வளைகாப்பு, புன்செய் புளியம்-பட்டியில் நடந்தது. நகர்மன்ற தலைவர் ஜனார்த்-தனன், கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்-களை வழங்கினார்.

