நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை அடுத்த முள்ளம்பட்டி, ஓலப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி சரஸ்வதி, 56; கடன் சுமையால் கணவன், மனைவி மன உளைச்சலில் இருந்தனர்.
கடந்த, 20ம் தேதி காலை சகோதரர் வீட்டுக்கு செல்வதாக சென்ற சரஸ்வதி பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடி-யபோது, காஞ்சிக்கோவில், கண்ணவேலாம்பாளையம் அருகில் கீழ்பவானி வாய்க்கால் கரையில், சரஸ்வதி செல்போன் மற்றும் செருப்பு கிடந்தது. கண்ணவேலாம்பாளையம் அருகில் வாய்க்கால் கரையோரம் சரஸ்வதி உடல் நேற்று மிதந்தது. கடன் சுமையால் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டி-ருக்கலாம் என்று, பெருந்துறை போலீசார் தெரிவித்தனர்.