sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

/

நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு


ADDED : பிப் 16, 2026 04:27 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழக வனத்துறை சார்பில், பறவைகள் கணக்கெடுப்பு ஆண்-டுக்கு ஒரு முறை நடக்கிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு, முதற்கட்டமாக நீர்வாழ் பறவை கணக்கெடுப்பு நடந்தது. வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி, பூந்துறை, கனகபுரம், வரட்டுபள்ளம், அந்தியூர் பெரிய ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, ஜரத்தல் ஏரி, தாமரைக்குளம் ஏரி உள்-ளிட்ட, 21 பகுதிகளில் கணக்கெடுப்பு நடந்தது.

தொடர்ந்து நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை நடந்தது. அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை, ஈரோடு என ஐந்து வனச்சர-கங்களில், 29 இடங்களில் கணக்கெடுப்பு நடந்தது. ஈரோடு வனச்-சரகத்தில் சென்னிமலை, கொடுமுடி, வெள்ளியங்கரடு, வாய்ப்-பாடி, வெள்ளோடு பகுதிகளில் நடந்த பணியில், வனத்து-றையை சேர்ந்த, 70 பேர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவும் கணக்கெடுப்பு நடந்தது. கணக்கெடுப்பின்போது கிராம மக்க-ளிடம் குருவி, பறவைகளை சுடக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். * சென்னிமலை சுப்பிர

மணிய சுவாமி கோவில் அமைந்துள்ள வனப்பகுதி, 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு நிலவாழ் பறவைகள் கணக்கெ-டுப்பு நடந்தது. இதில் தன்னார்வலர்களுடன் வனத்துறை பணியா-ளர்கள் வனவர் சிவராஜ், வனகாப்பாளர் துரைசாமி, வேட்டை தடுப்பு காவலர் ராஜா உட்பட பலர் ஈடுபட்டனர்.

சூரிய உதயத்தின் போது காலை, 6:௦௦ மணி தொடங்கி மதியம் வரை; மாலை, 4:௦௦ மணிக்கு தொடங்கி இரவு, 7:௦௦ மணி வரை கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், 32 வகையான பறவைகள் வசிப்பது முதல் கட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதில் அரிய வகை பறவையான, சாம்பல் இருவாட்சி பறவை பதிவாகியுள்ள-தாக வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு கணக்கெ-டுப்பில், 23 வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டது குறிப்-பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us