/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நில அபகரிப்பு புகார்; புளியம்பட்டி வாலிபரிடம் 'கிடுக்கி'
/
நில அபகரிப்பு புகார்; புளியம்பட்டி வாலிபரிடம் 'கிடுக்கி'
நில அபகரிப்பு புகார்; புளியம்பட்டி வாலிபரிடம் 'கிடுக்கி'
நில அபகரிப்பு புகார்; புளியம்பட்டி வாலிபரிடம் 'கிடுக்கி'
ADDED : ஜன 28, 2025 06:52 AM
ஈரோடு: சிவகங்கை மாவட்டம் கட்டாளப்பட்டியை அடுத்த பெரிய கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பவானிசாகர் அருகே அய்யம்பாளையத்தில், எனக்கு சொந்தமான, 3.36 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த, 2024ல் நிலத்தை பார்க்க சென்ற போது நிலத்தில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
சாகுபடி செய்த மூர்த்தியிடம் கேட்டபோது, அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரராஜன் என்பவரிடம் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வருவதாக தெரிவித்தார். சந்தேகமடைந்து நில ஆவணங்களை நகலெடுத்து பார்த்தபோது எனது பெயரில் போலி ஆதார் எண் தயார் செய்து, வேறு புகைப்படத்தை ஒட்டி, புன்செய்புளியம்பட்டியை சேர்ந்த அருண்குமார் உள்ளிட்ட ஒன்பது பேர் கும்பல் அபகரிப்பு செய்தது தெரிய வந்தது.அருண்குமாரிடம் கேட்டபோது நில உரிமையாளர் கணேசன் என்பவர், என்னை பவர் ஏஜென்டாக நியமித்துள்ளார் என்றார். அந்த கணேசனே நான்தான்; என் பெயரில் போலி ஆவணம் தயாரித்தது குறித்து போலீசில் புகாரளிப்பேன் என்றதால் கொலை மிரட்டல் விடுத்தார்.
அருண்குமார் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்து, சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார், அருண்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்,

