/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
/
ஈரோட்டில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : டிச 11, 2025 06:18 AM
ஈரோடு: தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், இ.பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், டிச.,1 முதல் இ.பைலிங் கட்டாயமாக்கிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். வக்கீல்கள் தாக்கல் செய்யும் வழக்கு-களை கோப்புக்கு எடுத்த பின், நீதிமன்ற ஸ்கேனிங் செய்து இணையத்தில் பதிவேற்றி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், சமூக விரோதிகளால் வக்கீல்கள் தாக்கப்பட்டு காயமடைந்து உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழலை தடுக்கும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாது-காப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்ற கோரிக்-கையை வலியுறுத்தி, வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் சரத் சந்தர் தலை-மையில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

