ADDED : ஜூலை 04, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில், வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தலைமை தபால் அலுவலகம் முன் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.