/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொட்டிகளில் கசிவு; சாலையில் படர்ந்த அடர் க தொட்டிகளில் கசிவு; சாலையில் படர்ந்த அடர் கழிவுகெமிக்கல் சாலையான சுண்ணாம்பு ஓடை சாலை

ADDED : ஏப் 04, 2025 01:26 AM
தொட்டிகளில் கசிவு; சாலையில் படர்ந்த அடர் கழிவுகெமிக்கல் சாலையான சுண்ணாம்பு ஓடை சாலை
ஈரோடு:ஈரோட்டில் பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடை உள்ளது. இங்கிருந்து மரவாபாளையம் செல்லும் சாலையில் தனியார் பிளீச்சிங் பட்டறை இயங்கி
வருகிறது. இங்கு துணிகளுக்கு பிளீச்சிங் செய்யப்பட்ட அடர் கழிவு முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், தொட்டிகளில் தேக்கி வைத்திருந்தனர். தொட்டிகளில் நேற்று காலை ஏற்பட்ட கசிவால் பல ஆயிரம் லிட்டர் பிளீச்சிங் கழிவு இளம் நீலம், பச்சை நிறத்துடன் சாலையில் ஓடியது. அடர் கெமிக்கல் சாலை, தெருக்களில் படிந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை
ஏற்பட்டது.அப்பகுதி மக்கள் புகாரின்படி, ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தீனா மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது வந்த அப்பகுதி மக்கள், 'இந்த பட்டறையில் இருந்து துார்நாற்றம் வீசுவதுடன், அவ்வப்போது இதுபோன்ற கழிவுநீர் வெளியேறி, நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது' என்று அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.