ADDED : மார் 27, 2026 05:05 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்-றான, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா வரும், 30ம் தேதி நள்ளிரவு தொடங்கி, 31ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இந்த விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்-வார்கள். 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரையிலான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.விழாவில் கலந்து கொள்ள, 30ம் தேதி காலை முதலே பக்தர்கள் வர தொடங்குவார்கள். இதனால் பண்ணாரியில் உள்ள டாஸ்மாக் கடையை, 30ம் தேதி மூட வேண்டும் என்று, இந்து அமைப்-புகள் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டி-ருந்தது.
இந்நிலையில், 31ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
எனவே, 30ம் தேதி கடையை மூட வேண்டிய அவசியமில்லை என்று, டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
