தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்ட விழிப்புணர்வு சேவை முகாம்

சட்ட விழிப்புணர்வு சேவை முகாம்

சட்ட விழிப்புணர்வு சேவை முகாம்


ADDED : செப் 01, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; சத்தியமங்கலம் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் ஆசனுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்-களில் வரும் அக்., 23 வரை சட்ட விழிப்புணர்வு சட்ட சேவை முகாம் நடக்க உள்ளது.

கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், சமூகத்தின் பின்தங்கிய, நலிவுற்ற பிரிவினருக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் தாலுகா நீதிமன்றத்தில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பல்வேறு சட்ட உதவி திட்டங்கள், சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முகாமின் முக்கிய நோக்கம்.

இலவச சட்ட உதவி, சட்ட ஆலோசனை, மக்கள் நீதிமன்றம், நிரந்தர மக்கள் நீதிமன்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டப்பாதுகாப்பு, முதியோருக்கான சட்ட உதவி உள்ளிட்ட பல்-வேறு ஆலோசனை வழங்கப்படும்.சட்டப்பிரச்னை ஏற்படும்போது மக்கள், ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தாலுகா நீதிமன்றங்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவை அணுகி, இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை பெறலாம். கூடுதல் விபரத்தை, 04295 220381 என்ற எண்ணில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us