/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனித உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு
/
மனித உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு
ADDED : டிச 11, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில், மனித உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, சட்ட விழிப்புணர்வு திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் ஸ்ரீவித்யா, மனித உரிமைகள், மாவட்ட சட்டபணிகள் செயல்பாடு குறித்து பேசினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி, கல்லுாரி மாணவ -மாணவியர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்-னைகள், அதில் இருந்து மீள்வது குறித்து பேசினார். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்-கப்பட்டன.

