ADDED : டிச 08, 2024 01:47 AM
எலுமிச்சை விலை சரிவு
திருப்பூர், டிச. 8-
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும், எலுமிச்சை வரத்து இயல்பாக இருந்தாலும், விற்பனை சுறுசுறுப்பாக இருந்ததால், கடந்த மாதம் விலை உயர்ந்தது.
கிலோ, 160 முதல், 180 ரூபாய்க்கு விற்றது. ஒரு பழம், ஆறு முதல், ஏழு ரூபாய்க்கு விற்றது. டிச., துவக்கம் முதல் எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது. உள்ளூரில் இரண்டாவது சீசன் துவங்கிய நிலையில், ஆந்திராவில் இருந்தும் எலுமிச்சை வர துவங்கியுள்ளதால், தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, மூன்று டன் வந்து குவிகிறது.
இரவு, அதிகாலை குளிர் காரணமாக எலுமிச்சை விற்பனை மந்தமாகியுள்ளது. இச்சூழலில் வரத்து அதிகமாகி வருவதால், விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ எலுமிச்சை, 90 முதல், 110 ரூபாய்க்கும், ஒரு பழம், நான்கு முதல், ஐந்து ரூபாய்க்கும் விற்றது.
* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 11,755 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 3௮ ரூபாய் முதல், 53.91 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,989 கிலோ தேங்காய், 1.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 3,712 மூட்டைகளில், ௧.66 லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 11௭ ரூபாய் முதல் 13௭ ரூபாய்; இரண்டாம் தரம், 61 ரூபாய் முதல் 14௧ ரூபாய் வரை, ௨.௦௨ கோடி ரூபாய்க்கு விற்றது.
* சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ, 980 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 550, காக்கடா, 300, செண்டுமல்லி,84, கோழிகொண்டை,150, ஜாதிமுல்லை, 600, கனகாம்பரம், 750, சம்பங்கி, 50, அரளி, 280, துளசி, 40, செவ்வந்தி, 160 ரூபாய்க்கும் விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 770 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 128.20 ரூபாய், குறைந்தபட்சம், 85.25 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் தேங்காய் ஏலத்துக்கு, 5,019 தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 47.85 ரூபாய், இரண்டாம் தரம், 29.95 ரூபாய்க்கும் ஏலம் போனது.