ADDED : மே 18, 2026 02:07 AM
ஈரோடு:கோடை
காலமாக தற்போது இளநீர், பழரசங்களை வாங்க இயலாதவர்கள், ஜூஸ்
போடுவதற்கு எலுமிச்சம்பழத்தை நாடுவது அதிகரித்துள்ளது. இதனால்
கிராக்கி ஏற்பட்டு, எலுமிச்சம்பழம் விலையும் உயர தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
ஈரோடு
தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் தென்காசி உள்ளிட்ட
சில பகுதிகள், ஆந்திராவில் இருந்து எலுமிச்சம்பழம் வரத்தாகும். கோடை
வெயிலால் தேவை அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் முதல் ரக
பழம் சில்லறை விற்பனையில் அதிகபட்சம், 5 ரூபாய், சிறிய அளவு பழம், 2
ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விற்றது. தற்போது விலை இருமடங்காகி
உள்ளது.
மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ, 200 ரூபாய் முதல் 250
ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு பழத்தின் விலை, 7 ரூபாய் முதல் 15
ரூபாய் வரை விற்கிறது. மழைக்காலம் தொடங்கும் வரை விலை உயர்வு
நீடிக்கும். இவ்வாறு கூறினர்.
