தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வளர்ப்பு நாயை கடித்து கொன்ற சிறுத்தை

வளர்ப்பு நாயை கடித்து கொன்ற சிறுத்தை

வளர்ப்பு நாயை கடித்து கொன்ற சிறுத்தை


ADDED : ஜூன் 04, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் ஒன்றியம், பங்களாபுதுார் அருகே புஞ்சை துறையம் பாளையம் கிராமம் மாதையன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கிடுசாமி. இவர், தோட்டத்தில் ஆடு, மாடுகளுடன், 5 வளர்ப்பு நாய்களையும் வளர்த்து வருகிறார்.

நான்கு நாய்களை மற்றும் கயிற்றால் கட்டி வைத்துவிட்டு, ஒரு நாயை மட்டும் கட்டாமல் விட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை வெங்கிடுசாமி தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு கட்டி வைக்காத வளர்ப்பு நாயை கடித்து, உடல் முழுவதையும் தின்று விட்டு, தலையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளது. வனத்

துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் சிறுத்தை வந்து சென்றதை உறுதி செய்தனர். விரைவில் அப்பகுதியில் கேமரா பொருத்துவதாக கூறினர்.

சிறுத்தையின் தாக்குதலால் அப்

பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும்படி, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us