ADDED : ஏப் 06, 2026 05:50 AM
சென்னிமலை:-சென்னிமலை
பகுதியில் ஓராண்டாகவே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்
பரவியது. கன்று குட்டி, ஆடு, நாய் போன்றவற்றை அவ்வப்போது அடித்து
கொன்றதும் நடந்தது.
வனத்துறையினர் பல இடங்களில் கேமரா வைத்தும்
அதில் கூட நடமாட்டம் கண்டறிய முடியவில்லை. நடமாட்டம் உள்ள
பகுதிகளில் கூண்டு வைத்தும் அகப்படவில்லை. இந்நிலையில் நேற்று
முன்தினம் இரவு, சென்னிமலை தெற்கு பகுதி மலை அடிவார பகுதியான
வெப்பிலியை அடுத்த பச்சப்பாளி என்ற இடத்தில், பாறை மீது சிறுத்தை
அமர்ந்திருந்துள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சிலர், மொபைல்போனில்
படம் பிடித்துள்ளனர். இதுவரை வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த
சிறுத்தை, முதல் முறையாக மொபைல் கேமராவில் சிக்கியுள்ளது.
சிறுத்தையின் வேட்டை தொடங்கும் முன், வனத்துறையினர் சிறுத்தையை
பிடிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
