ADDED : ஏப் 18, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
டி.என் பாளையம் :டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே பெருமுகை ஊராட்சி ஏரங்காட்டூரை சேர்ந்தவர் விவசாயி சக்தி விஸ்வநாதன் 45; தோட்டத்தில் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து, இவரின் வளர்ப்பு நாய், கோழி, வாத்து உள்ளிட்ட கால்நடைகளை கடித்து கொன்றுள்ளது.
இதுகுறித்து அந்தியூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தோட்டத்துக்கு வந்த சிறுத்தை, பசு மாட்டு கன்றை கடித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
