/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழுநோய் கண்டறியும் முகாம் தொடக்கம்
/
தொழுநோய் கண்டறியும் முகாம் தொடக்கம்
ADDED : ஜன 23, 2026 04:42 AM
ஈரோடு: மத்திய மற்றும் மாநில அரசுகள், 2027-30க்குள் தொழுநோய் பர-வலை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் முதல் நிலை ஊனத்-துடன் புதிய நோயாளிகள், குழந்தை நோயாளிகள் கண்டுபிடிக்-கப்பட்ட, எட்டு வட்டாரங்கள், ஒரு நகராட்சி, ஜம்பை, குருவ-ரெட்டியூர், சிறுவலுார், திங்களூர், சென்னிமலை, சிவகிரி, புளி-யம்பட்டி, சித்தோடு மற்றும் சத்தியமங்கலத்தில், நேரடி தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் கடந்த, 19ம் தேதி தொடங்கி-யுள்ளது. பிப்.,6ம் தேதி வரை முகாம் நடக்கவுள்ளது. இப்ப-ணியில், 986 முன் களப்பணியாளர், 97 மேற்பார்வையாளர் ஈடுபடுகின்றனர்.
தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஊனத்தை தடுக்கலாம். இதனால் மற்றவர்க-ளுக்கு பரவாமல் தடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்-தனர்.

