தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போவோமா ஊர்கோலம் ஆகட்டுமே 'டிராபிக் ஜாம்'

போவோமா ஊர்கோலம் ஆகட்டுமே 'டிராபிக் ஜாம்'

போவோமா ஊர்கோலம் ஆகட்டுமே 'டிராபிக் ஜாம்'


ADDED : ஏப் 05, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி : கோபி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பிரபு, நேற்று மனுத்தாக்கல் செய்தார். இதற்காக கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து சத்தி சாலையில் ஊர்வலமாக, 10:00 மணிக்கு புறப்பட்டார். இதனால் நாயக்கன்காடு முதல், கோபி பஸ் ஸ்டாண்ட் வரை, மொடச்சூர் சாலை, பாரியூர்-அத்தாணி சாலை பிரிவு, மேட்டுவலவு பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு போலீசார் கூட இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

இதனால் பலர் பாரியூர் சாலை, மேட்டுவலவு பஸ் ஸ்டாப் அருகே உள்ள வீரசாமி வீதி வழியாக நுழைந்து, சரவணா தியேட்டர் சாலை வழியாக கச்சேரிமேட்டுக்கு சென்றனர். இதனால் அந்த சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஈரோடு கோவில் திருவிழாவு பந்தோபஸ்த் பணிக்கு போலீசார் சென்றுள்ளனர். மனு தாக்கல் செய்ய, 4,000 பேர் ஊர்வலமாக வந்துள்ளனர்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us