/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தோட்ட வீடுகளை கண்காணிக்க கூடுதல் போலீஸ் கோரி கடிதம்
/
தோட்ட வீடுகளை கண்காணிக்க கூடுதல் போலீஸ் கோரி கடிதம்
தோட்ட வீடுகளை கண்காணிக்க கூடுதல் போலீஸ் கோரி கடிதம்
தோட்ட வீடுகளை கண்காணிக்க கூடுதல் போலீஸ் கோரி கடிதம்
ADDED : மே 11, 2025 01:17 AM
ஈரோடு, சிவகிரி தம்பதி கொலையில், 10 நாட்களாகியும் சிறு தடயம் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை பிடிக்கும் ஒரு பகுதியாக தோட்ட வீடுகள் கணக்கெடுப்பு, சிசிடிவி கேமரா பொருத்துவது, வாய்க்கால் கரையோரங்களில் தேடுதல் பணி, ரோந்து, வாய்க்கால் கரையோர தோட்ட வீடுகளில் ரோந்து, கண்காணிப்பு என தனிப்படையினரின் தேடுதல் தொடர்கிறது.
இப்பணிகளில் ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்ட போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிற மாவட்டங்களில் போலீசாரின் பணி பாதிக்கப்படுவதோடு, போதிய போலீசார் இல்லாத நிலைமையும் நீடிக்கிறது. இதற்கிடையில் போலீசார் கீழ்பவானி வாய்க்கால் கரையோர தோட்ட வீடுகள் மட்டுமின்றி, காலிங்கராயன் வாய்க்கால் கரையோர தோட்ட வீடுகளில் தனியாக வசிப்பவர்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர்.
இவற்றிலும் கணிசமான முதியோர் தனியே வசிப்பதும், சிசிடிவி கேமராக்களின்றி பாதுகாப்பற்ற சூழலில் வசிப்பதும் போலீசாரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எனவே கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அழைக்க, மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கூடுதலாக போலீசார் தேவையென்று, மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். குறிப்பாக தம்பதி கொலையில், கொலையாளிகளை கண்டுபிடிக்கும் வரையிலாவது, போலீஸ் பாதுகாப்பை வாய்க்கால் கரையோரம் பலத்தப்படுத்த வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறினர்.

