/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எல்.ஐ.சி., ஏஜெண்டுகள் பவானியில் ஆர்ப்பாட்டம்
/
எல்.ஐ.சி., ஏஜெண்டுகள் பவானியில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 19, 2024 02:32 AM
பவானி: பவானியில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் முன், எல்ஐசி ஏஜெண்டுகள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
செயலாளர் செல்வன், பொருளாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி., பாலிசிக்கான ஜி.எஸ்.டி.,யை முற்றிலும் நீக்க வேண்டும். எல்.ஐ.சி., பாலிசி பெயரில் வழங்கப்படும் கடனுக்கான விகிதத்தை குறைக்க வேண்டும். ஏஜெண்ட் கமிஷனை உயர்த்த வேண்டும். அனைத்து ஏஜெண்டுகளுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்-பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 50க்கும் மேற்-பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

