/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணை கொன்று நகை கொள்ளை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
/
பெண்ணை கொன்று நகை கொள்ளை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை கொன்று நகை கொள்ளை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை கொன்று நகை கொள்ளை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
ADDED : நவ 29, 2025 01:32 AM
ஈரோடு, கொடுமுடி அருகே, ராசாம்பாளையம், சம்மங்குட்டை புதுாரை சேர்ந்தவர் அருக்காணி, 70; வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்தார். இது தொடர்பாக கொடுமுடி, குட்டப்பாளையத்தை சேர்ந்த பூச்சி மருந்து தெளிக்கும் தொழிலாளி மாரிமுத்துவுடன், 65, அறிமுகம் ஏற்பட்டது. அருக்காணி பணம், நகை வைத்திருப்பதை நோட்டமிட்ட மாரிமுத்து, அவரை தொடர்ந்து பின் சென்று வந்தார்.
கடந்த, 2018 டிச.,10ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வீட்டில் தனியாக அருக்காணி இருப்பதை அறிந்து சென்றார். வட்டிக்கு பணம் கேட்பது போல் நடித்து, அவரை கொலை செய்து, தாலிக்கொடி, தாலிக்குண்டு, தாயத்து என ஐந்தேகால் பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார். கொடுமுடி போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.
ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசொர்ணகுமார் வழக்கை விசாரித்து, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததற்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், கொலை செய்ததற்கு, ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், நகைகளை கொள்ளை அடித்ததற்காக, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், ஆதாரங்களை அழிக்க முயன்றதற்காக, 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையுடன், 23 ஆண்டு சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி வாதாடினார்.

